என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பைக் திருட்டு"
தேனி:
தேனி மதுரை சாலையில் க.விலக்கு பகுதியில் நவீன வசதிகளுடன் தரம் வாய்ந்த அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டது. உயர்தர சிகிச்சைகள் அளிக்கப்படுவதால் சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமல்லாது வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
இது மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் அதிக அளவில் பொதுமக்கள் வருகின்றனர். எனவே தினசரி 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வருகின்றனர். ஆனால் போதிய பாதுகாப்பு இல்லாததால் மோட்டார் சைக்கிள் உள்பட வாகனங்கள் தொடர்ந்து திருடு போகின்றன. இதனால் இங்கு வரும் பொதுமக்கள் ஒருவித பீதியுடனேயே வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர்.
இங்கு நிறுத்தப்படும் வாகனங்களை ஒரு கும்பல் தொடர்ந்து திருடி வருகிறது. இதனால் பொதுமக்களிடையே பீதி நிலவுகிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் தெய்வம் (வயது 37). இவர் தனது தாய்க்கு சிகிச்சை அளிக்க மோட்டார் சைக்கிளில் தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தார். சிகிச்சை முடிந்து வெளியே வந்து பார்த்தபோது பைக் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் க.விலக்கு போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். அரசு ஆஸ்பத்திரியில் நிரந்தரமாக போலீசாரை நியமித்து ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆம்பூர்:
ஆம்பூர் பேபி காலனி பகுதியில் ஆம்பூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு சந்தேகபடும்படி சுற்றிதிரிந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த முகமது முஸ்தபா (வயது 18). தன்சூர் அகமது (19). நூரில் அமின் (23). என்பது தெரிய வந்தது.
மேலும் ஆம்பூர் சுற்று வட்டார பகுதியில் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்ததை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.